Categories
கிரிக்கெட் விளையாட்டு

காயமடைந்த இஷாந்த் … நியூசிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல்…!!

ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதன்மை பந்துவீச்சாளராகத் திகழ்பவர் இஷாந்த் சர்மா. தனது அபாரமான பந்துவீச்சினால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை அவர் தேடி தந்துள்ளார். இந்நிலையில், ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில், விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகையில் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை இஷாந்த் சர்மா வீசியுள்ளார்.

அப்போது கள நடுவரிடம் எள்பிடபிள்யூ கோரியபோது தடுமாறி கீழே விழுந்ததால் அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த காயத்திலிருந்து முழுமையாக குணமடைய அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமிக்கு செல்ல வேண்டிய சூழலும் நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21ஆம் தேதி வெலிங்டனில் தொடங்கவுள்ளது.

Categories

Tech |