Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு மின் தேவையை பூர்த்தி செய்ய…. ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி…..!!!!!

தமிழ்நாடு மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு சொந்த மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை என்பதால் மின்வாரியம், மத்திய அரசின் மின் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம்கொள்முதல் செய்கிறது. ஆகவே மத்திய அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து இப்போது டெண்டர்’ கோரி, 5 வருடங்களுக்கு 1,500 மெகா வாட் மின் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்கு அனுமதி வழங்குமாறு மின் வாரியம் சார்பாக ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனுகொடுக்கப்பட்டது. அதனை பரிசீலித்த ஆணையம் 1 யூனிட் மின்சாரத்தை மின்வழித்தட கட்டணங்களையும் சேர்த்து, 5 ரூபாய்க்கு கீழ் வாங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

Categories

Tech |