இணையதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ‘கன்னியாகுமரி-நாகர்கோவில்’ என்ற பெயரில் இணையதளத்தில் ஒரு கணக்கை ஆரம்பித்துள்ளார். இந்த இணையதளம் மூலமாக மத கலவரத்தை தூண்டும் விதமான சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்ய சோபன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் புள்ளுவிளை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் அவதூறு செய்திகளை பரப்பியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கண்ணனை கைது செய்து இணையதளத்தில் இருந்து அவதூறு செய்திகளை அழித்தனர்.