Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பகவதி அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற வலிய படுக்கை பூஜை…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

சிறப்பாக நடைபெற்ற வலிய படுக்கை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கேரள பெண்கள் இருமுடி கட்டி வருவதால் பெண்களின் சபரிமலை என்ற சிறப்பு பெயரும் இருக்கிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த கோவிலில் அம்மனின் பிறந்த நாளான பரணி நட்சத்திரம் அன்று மீன் பரணிக்கொடை விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு உருள் நேர்ச்சை, உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷ பூஜை, பூமாலை, வில்லிசை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் போன்றவைகள் நடைபெற்றது.

இதனையடுத்து குத்தியோட்டம், சாயரட்சை தீபாராதனை, அத்தாழ பூஜை, இரவு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் போன்றவைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மனை மலர்களால் அலங்காரம் செய்து, பல்வேறு உணவுப் பண்டங்களால் படையல் செய்து வலிய படுக்கை என்னும் மகா பூஜை நடைபெற்றது. இந்த பூஜை 3 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். இந்த பூஜை மாசித் திருவிழாவின் 6-ம் திருவிழா, கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் பரணி கொடை விழா ஆகிய 3 நாள்களில் நடைபெறும். இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |