அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் என்ற மாவட்டத்தில் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனான அன்குரித் கர்மாகரின் என்ற மாணவர் பார்வையற்றோருக்கு பயன்படுத்தும் விதமாக புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். பார்வையற்றவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது சில நேரம் தடுக்கி விழ வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் அவர்கள் மிகவும் மெதுவாகவும், கைகளில் ஏதாவது வைத்துக்கொண்டு தரையில் தட்டி தட்டி அதை பின்தொடர்ந்து நடப்பது வழக்கம். அவர்களுக்கு உதவும் விதமாக கர்மாகர் ஒரு தொழில்நுட்ப மூலம் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அதன்படி நவீன தன்மையோடு ஸ்மார்ட் ஷூவை அவர் வடிவமைத்துள்ளார். இது பார்வையற்றவர்களுக்கு அவர்களின் தடைகளில் இருந்து பாதுகாக்க உதவும். இந்த ஷூவை அணிந்து செல்லும் போது பார்வையற்றவர்கள் செல்லும் வழியில் அவர்களுக்கு தடை ஏற்பட்டால் ஷூவிலுள்ள சென்சார் கருவி ஓசை எழுப்பும். பார்வையற்ற நபர் அதைக் கேட்க முடியும், மேலும் அவர் எச்சரிக்கையாகி, தடையைத் தவிர்க்கலாம். அதற்கு ஏற்றாற்போல அவர்கள் செயல்பட முடியும். இந்த சிறுவனுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.