Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணம் செய்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்த மர்ம நபர்கள் தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூரில் ஜெபஸ்டின் ஜெமிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

இந்நிலையில் ஜெமிலா தனது பையில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெமிலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |