Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எனக்கு நியாயம் வேண்டும்” பெட்ரோல் பாட்டிலுடன் வந்த நபர்…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு…!!

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பாக ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே குன்னன்விளை பகுதியில் ஜெயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட புரட்சிகர மார்க்சிஸ்ட் தலைவராக இருக்கிறார். கடந்த 29-ம் தேதி ஜெயனுக்கும், அ.தி.மு.க பிரமுகரான பிரண்ட்ஸ் பாலு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறி பிரின்ஸ் பாலுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஜெயன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜெயனும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் தான் அளித்த புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்பாக தீக்குளிக்கப் போவதாக கூறி ஜெயன் பெட்ரோலுடன் சென்றுள்ளார். இதுகுறித்து குளச்சல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயனை வரும் வழியிலேயே மடக்கி பிடித்துள்ளார். அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் ஜெயன் தரையில் விழுந்து கதறி அழுதுள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் ஜெயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி குளச்சல் காவல்துறைக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Categories

Tech |