உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் போர்தொடுத்து 5 வாரங்கள் கடந்த நிலையில் அங்கு லட்சக்கணக்கில் பொருட் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் பெரும்பாலான நகரங்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள ஒரு சில நகரங்களும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உக்ரைனின் இசியம் மாகாணத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவ வீரர்களை அப்பகுதி மக்கள் விஷம் கலந்த கேக்குகளை கொடுத்து வரவேற்றுள்ளனர்.
இந்த கேக்குகளை உண்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து 28 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கண்டறியப்படாத ஆல்கஹால் விஷம் கலந்து உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவலை உக்ரைன் உளவுத்துறை வெளியிட்டுள்ளது.