Categories
தேசிய செய்திகள்

அசாம் தேயிலை மதிப்பு இவ்வளவா?…. ஒரு கிலோ சிறப்பு தேயிலை எவ்வளவு தெரியுமா?…. புதிய சாதனை….!!!

உலகில் புகழ் பெற்ற அசாம் தேயிலைக்கு நுகர்வோரிடம் எப்போதுமே தனி மவுசு உள்ளது. அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 7,500 கோடிக்கு மேல் ஆசான் தேயிலை விற்பனை செய்யப்பட்டது. கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் தரவுகளின்படி 2020-2021 ஆம் ஆண்டில் தேயிலை ஏல மையத்தில் மொத்தம் 18,298 போடி கிலோ தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பிப்ரவரி வரை ரூ.3,320 கோடி தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவுகாத்தி தேயிலை வேலை வாங்குவார் சங்கத்தின் செயலாளர் டினேஷ் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களில் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் 7 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2021-2022 காலகட்டத்தில் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில், அசாம் சிறப்பு தேயிலையானது ஒரு கிலோவிற்கு ரூ.99,999 என்ற சாதனை விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு லட்சத்துக்கு ஒரு ரூபாய் குறைவு.

Categories

Tech |