கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 7 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களின் விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எனவே கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை தங்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மனுதாரரின் குடும்பத்தினருக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக 7 லட்ச ரூபாயை 2 மாதத்திற்குள் நிவாரணமாக வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.