தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறை வழங்க பரிசீலிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதமும் கடுமையான கோடை காலம் ஆகும் இந்த காலத்தில் இந்தியாவில் வெயிலின் தாக்கம் சற்று தீவிரமாக இருக்கும். இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் பள்ளிக்கு வர மிகவும் சிரமப் படுவதை கருத்தில் கொண்டு இனி வரும் மாதங்களில் சனிக்கிழமைதோறும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை வழங்க செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Categories