கடந்த 14 நாட்களில் 12 முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.108.96க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.99.04க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து இன்று ஒரு லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து ரூ.109.34க்கும், டீசல் விலை லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து ரூ.99.42க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இது நாடு முழுவதும் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதனால் விலை வாசி உயர்வு அதிகரிப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கும் மாநில அரசிற்கும் சம்பந்தம் இல்லை. மத்திய அரசின் மீது விமர்சனம் வைக்க அதிமுகவிற்கு தைரியம் இல்லை, வைக்கவும் மாட்டார்கள் என்று பேசியுள்ளார்.