Categories
மாநில செய்திகள்

135-வது மாரத்தான் போட்டி…. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தனது 135 -வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்துள்ளார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் தனது 135-வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்துள்ளார். இவர் தனது குழுவுடன் 21.1 கி.மீ தூரம் ஓடியுள்ளார். இவர் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வருகிறார். இதுவரை 2, 850 கி.மீ தூரத்திற்கும் மேலாக ஓடியுள்ளார். இவர் மாதந்தோறும் மாரத்தான் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வார். அதன்படி 20 ஆயிரம் கிலோ மீட்டர் வரை ஓடி பயிற்சி செய்துள்ளார். இந்நிலையில் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு நபரும் இதுவரை 23 ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேல் மாரத்தான் ஓடியதில்லை‌ என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது, கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில் வலது காலில் தீவிர எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் மருத்துவர்கள் என்னால் எழுந்து நிற்க கூட முடியாது என்று கூறினார்கள். இதையே ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு நான் மாரத்தான் ஓடி வருகிறேன். கடந்த 2014-ம் ஆண்டு பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் பகுதியில் 21.1 கிலோ மீட்டர் ஓடினேன். இதுவே என்னுடைய முதல் மாரத்தான் ஓட்டம் ஆகும். இதனையடுத்து ஆஸ்திரேலியா. ஆஸ்டிரியா, இத்தாலி, சிங்கப்பூர், கத்தார், நார்வே போன்ற பல நாடுகளிலும் ஓடியுள்ளேன். இதைத்தொடர்ந்து இந்தியாவிலும் 20 மாநிலங்களில் எனது குழுவினருடன் மாரத்தான் ஓடியிருக்கிறேன். மேலும் நாட்டில் உள்ள 37 மாநிலங்களிலும் எனது கால் தடத்தை பதித்து ஃபிட் இந்தியா ஆக வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு ஆகும். இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்து இருக்கிறோம் என்றும் கூறினார்.

Categories

Tech |