Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை  திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் சசிகுமார்-முனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று மறுபடியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றதை  பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து முனீஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது மடப்புரம் விளக்கு பகுதியை  சேர்ந்த ஜெய்சக்தி என்பது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஜெய்சக்தியை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |