இன்று நடைபெற இருந்த கணிதத் தேர்வுக்குரிய வினாத்தாள் இணையதளத்தில் வெளியானது. இதன் காரணமாக மாணவர்கள் திருப்புதல் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்ற குழப்பத்தில் இருந்தனர். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாற்று வினாத்தாள் ஏற்பாடு செய்யப்பட்டு கணிதத் தேர்வு நடைபெறும் என கூறினார்.அதன்படி தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில் பொதுத் தேர்வு வினாத்தாள்கள் அதை வெளியாவதை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதன்படி ஜன்னல் இல்லாத அறைகளில் தேர்வு வினாத்தாள்கள் வைப்பது. அவற்றை பாதுகாக்க 1200 காவலர்கள், பறக்கும்படை 1500 பேர் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வின்போது மாணவர்கள் சோதனை செய்து பதட்டப்பட வேண்டாம் என்றும், வினாத்தாள்களை அச்சிடும் பிரிண்டர்களின் பின்னணி ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.