நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக புள்ளிமான் ஒன்று சென்றுள்ளது. அப்போது தெரு நாய்கள் கடித்து குதறியதால் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புள்ளி மானின் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.