Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி கக்கன் வீதியில் கட்டிட தொழிலாளியான மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமாரிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் மோகன்ராஜ் இல்லாத நேரத்தில் விஜயகுமாரி அந்த வாலிபருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்து அறிந்த மோகன்ராஜ் தனது மனைவியை கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகுமாரி வீட்டை விட்டு வெளியேறி தனது கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மோகன்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகன்ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |