Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிறுத்தையின் பாய்ச்சலால் பீதியில் கட்சித் தொண்டர்கள்… சிக்கப் போவது யார்….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலை சிறுத்தை கட்சியின் நடத்தப்படாத நிர்வாகிகள் தேர்தல் இம்முறை நடத்தப்படும் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏப்ரல் 1-ம் தேதி டெல்லியில் இருந்து முகப்புத்தகம் வாயிலாக நேரலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தை கட்சியில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படவில்லை.  இதனால் 1990-ல் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பொதுச்சேவை ஆற்றும் நிர்வாகிகள், வழக்குகளை சந்தித்து பல்வேறு இன்னல்கள் அனுபவித்தவர்களை கௌரவிக்கும் வகையில் மாவட்டம் தோறும் மணிவிழா நடத்தி வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி திருமாவளவனின் 60வது பிறந்த நாள் அன்று விருது வழங்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியில் இணைய ஆன்லைன் வாயிலாக பகிரப்படும் லிங்க் கட்சியின் தலைமைக்கு தெரியாமல் அதிகாரப்பூர்வமின்றி பகிரப்பட்டது. அது குறித்த கருத்துக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதாகவும் கட்சியின் மீது அதீத பற்றும், பாசமும் கொண்ட தொண்டர்கள் யாரேனும் அந்த லிங்கை உருவாக்கியுள்ளார்கள் என்றால் எனக்குத் தெரிவியுங்கள்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 மற்றும் 3 சட்டப் பேரவை தொகுதிகளை உள்ளடக்கி 90 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் பொருளாளர், மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்றும் கட்சிப் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் அப்பணியை தொடர்வார்கள், தேவையற்ற வழக்குகளில் சிக்கி கட்சியில் ஒருங்கிணைந்து செயல்பட மறுப்பவர்கள் நீக்கப்படுவர்” என்றும் கூறியுள்ளர். இதனை தொடர்ந்து கட்சியில் பொறுப்பில் உள்ள உறுப்பினர்கள் சிறிது அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

Categories

Tech |