இலங்கை நாட்டில் புதிதாக 4 அமைச்சர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் 4 பேரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் வரையிலும் தற்காலிக நடவடிக்கையாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று அரசாங்கத்தின் மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு அமைச்சர்களின் விபரம
1. அலி சப்ரி – நிதியமைச்சர்
2. தினேஷ் குணவர்தன – கல்வியமைச்சர்
3. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் – வெளிவிவகார அமைச்சர்
4. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள் அமைச்சர்
பசில் ராஜபக்ஷவுக்கு பதில் அலி சப்ரி புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மற்ற 3 பேரும் முன்பே அந்தந்த துறை அமைச்சர்களாக செயல்பட்டு வந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. நீதி அமைச்சராக இருந்த அலி சப்ரி, தற்போது நிதியமைச்சராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.