Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி…. பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்து விபத்து…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இருந்து 270 அடி நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு மூன்று லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகள் 300 அடி நீளம் கொண்டதால் வளைவுகளில் எளிதாக திருப்ப முடியாது. இதற்காக லாரியின் பின்பகுதியில் 180 அடி தூரத்தில் ஆபரேட்டருக்கு என்று தனி அறை அமைந்துள்ளது. அதில் ஆப்பரேட்டர் ஒருவர் அமர்ந்து முன்பக்க டயர் திரும்புவதை பார்த்து ரிமோட் மூலம் பின்பக்க டயரை இயக்குவார். இதன்மூலம் வளைவு பகுதியில் லாரியை ஓட்டுநரும், ஆப்பரேட்டர் இணைந்து பாதுகாப்பாக திருப்புவார்கள்.

இந்நிலையில் 3 லாரிகளும் திண்டுக்கல்- மதுரை நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தன. அப்போது சின்னாளபட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் இருக்கும் வளைவில் முதல் 2 லாரிகள் பாதுகாப்பாக திரும்பி சென்றன. மூன்றாவதாக சென்ற லாரி வளைவில் திரும்ப முயற்சிக்கும்போது பின்பக்க டயர்களை திருப்புவதற்காக ஆப்பரேட்டர் அறையில் இருந்த சூரத் என்பவர் ரிமோட்டை இயக்கியுள்ளார்.

ஆனால் ரிமோட் வேலை செய்யாததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி காற்றாலை இறக்கையுடன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் ராமநாதனும், ஆப்பரேட்டர் துரத்தும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |