Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் செயல் மனிதநேயத்தை மீறியது…!! ஜப்பான் அதிபர் கடும் தாக்கு….!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் செய்து வரும் அத்துமீறிய செயலைக் கண்டித்து பல நாட்டு தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

“சர்வதேச சமூகத்துடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் தடைகளை பிறப்பித்திருக்கும் அதே வேளையில் ஜப்பான் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை உறுதியாக செயல்படுத்தும். சர்வதேச சட்டத்தை மீறும் ரஷ்யாவின் இந்த மனிதநேயமற்ற செயல்களை நாம் கடுமையாக கண்டிக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் போன்றே ஜப்பான் ரஷ்யா மீது பொருளாதார தடையை பிடிக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.!” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |