தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், இப்போது சபரி என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதாவது அனில்காட்ஸ் இயக்கக்கூடிய இந்த படத்தை மஹா மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் பங்கேற்றுள்ளார். காதல் மற்றும் கிரைம் கலந்த திரைப்படமாக சபரி திரைப்படம் இருக்கும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது. இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி போன்றோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு கோபி சுந்தரின் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குனராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத்தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் போன்றோரும் பணிபுரிகின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு உகாதி தினத்தன்று தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதன் போஸ்டரை படக்குழு இப்போது வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.