பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வை நடத்த கூடாது என ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 பல்கலைகழகங்களில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என யு.ஜி.சி அறிவித்துள்ளது. இந்த தேர்வின் மூலமாகவே மாணவர்களுக்கான இளங்கலை பட்டப் படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும். கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியின் கீழ் மத்திய பல்கலைக் கழக பொது நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த தேர்வை 14 பல்கலைக் கழகங்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டது. இதை மற்ற பல்கலைக் கழகங்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தற்போது அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பொதுத் தேர்வை பின்பற்ற வேண்டுமென யு.ஜி.சி அறிவித்துள்ளது.
இந்தப் பொது நுழைவுத் தேர்வை அனுமதிக்க கூடாது என ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது இந்த பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. இவர்கள் மத்திய பல்கலைக் கழக பொது த் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை பொருத்தே மாணவர் சேர்க்கை நடைபெறும். இருப்பினும் வெவ்வேறு பல்வேறு வாரியங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு முறைகளில் பன்முகத்தன்மை உள்ளது. இதனால் 12-ம் வகுப்பு மதிப்பெண்களை பயன்படுத்துவதற்கு அரசு விரும்பவில்லை. மேலும் சில வாரியங்கள் கூடுதல் மதிப்பெண்களை தாராளமாக வழங்குவதால் குறிப்பிட்ட வாரியங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நியாயமில்லாத கூடுதல் நன்மையாக அமைகிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.