Categories
உலக செய்திகள்

பிளான் B-க்கு மாறிய புடின்…. ரஷ்யாவில் திட்டமிடப்படும் வெற்றி அணிவகுப்பு… வெளியான தகவல்…!!!!

ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் உக்ரைனின் டான் பாஸ் தொகுதியில் வெற்றியை பெறுவதற்காக படைகள் திசை திருப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது தலைநகர் மற்றும் உக்ரைனின் பிற பகுதிகளில் இருந்து பின்வாங்கி கிழக்கு உக்ரைன் பகுதியான டான்பாஸ் பகுதியில் கவனத்தை திசை திருப்பி உள்ளார்கள். ரஷ்ய ராணுவத்தின் இந்த திட்டத்திற்கு இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் சரணடைந்ததை குறிக்கும் வகையில், ரஷ்யாவின் சிறப்பு சதுக்கத்தில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் வருடாந்திர வெற்றி அணிவகுப்பில் உக்ரைன் வெற்றியையும் கொண்ட ஜனாதிபதி திட்டமிட்டு இருப்பதே காரணம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதன் அடிப்படையில் வரும் ஏப்ரல் 9ம் தேதிக்குள் உக்ரைனில் டான்பாஸ் பகுதியில் வெற்றியை பெறுவதற்காக படைகள் திசை திருப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய மற்றும் உக்ரைனின் அதிகரிக்கும் வெப்பநிலை மாற்றத்தை எதிர்பார்ப்பதால் எதிர்பார்பதால் டாங்கிகளை முன்னகர்த்தி செல்வதில் பெரும் சிரமம் ஏற்படலாம்  என அதிகாரிகள் நினைத்து இருப்பதாலும் இந்த முடிவு எட்டப்பட்டு இருக்கலாமென தெரியவந்திருக்கிறது. இந்த சூழலில் உக்ரைன் வீரர்களின் தீவிர தடுப்பு தாக்குதல் ரஷ்ய ஜனாதிபதி புடின் முதல் மூல திட்டமான உக்ரைனை  முழுவதும் கைப்பற்றும் திட்டம் தோல்வியில் முடிவடைந்து விட்டது.

அதனால் தான் தற்போது கிழக்கு உக்ரைனில் கவனம் செலுத்தும் பிளான் பி  செயல்படுத்துவதற்கு ஏப்ரல் 9ஆம் தேதி காலக்கெடு நிர்ணயித்து உள்ளார் என உக்ரைனின் முன்னாள் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் கூறியுள்ளார். இந்த பின்னடைவிற்கு பிறகு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் இனப்படுகொலைக்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்..

Categories

Tech |