Categories
மாநில செய்திகள்

#சூப்பர்சங்கிரஜினி…. இந்தியளவில் ட்ரெண்டிங்…. அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!

பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கப்போவதில்லை என்று ரஜினி கூறியது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சென்னையில் போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினி விளக்கமளித்தார் .

அதில் தாம் ஊடகங்களில் வந்ததையே கூறியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இல்லாத விஷயம் ஒன்றும் நான் சொல்ல, கற்பனையாக ஒன்னும் சொல்லல , மத்தவங்க சொன்னதுதான் நான் சொல்லி இருக்கேன். இது  சர்ச்சையாகி இருக்கிறது , இதுக்கு நான் மன்னிப்பு கேட்கணும் ,  வருத்தம் தெரிவிக்கனும் என்று சொல்றாங்க. சாரி நான் மன்னிப்பு கேட்க முடியாது வருத்தம் தெரிவிக்க முடியாது என்று தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன் என்று ரஜினி ஆதாரத்துடன் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. ரஜினியின் இந்த கருத்துக்கு ஆதரவாக அவரின் ரசிகர்கள் #மன்னிப்பு_கேட்க_முடியாது , #ரஜினிகாந்த்  , #Rajinikanth என்ற ஹாஷ்டகை ட்ரென்ட் செய்து வருகின்றனர். அதே போல இவரின் இந்த கருத்துக்கு எதிராக #சூப்பர்சங்கிரஜினி என்ற ஹாஷ்டக்கும் ட்ரெண்டாகி வருகின்றது.

Categories

Tech |