Categories
தேசிய செய்திகள்

“பிர்பூர் வன்முறை” 8 பேர் உயிரிழந்த கொடூரம்…. குரூப் டி பிரிவில் அரசு வேலை…. முதல்வர் அறிவிப்பு….!!!!

வன்முறையில் இறந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது .

மேற்கு வங்கம் பிர்பூம் மாவட்டத்தில் போக்டுயி கிராமத்தில் கடந்த மாதம் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 3 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் 2 சிறுவர்கள், 3 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை கொல்கத்தா நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, சிபிஐ‌ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வன்முறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் வன்முறையால் உயிரிலிந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குரூப் டி  பிரிவில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |