நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வந்த சமயத்தில் மருத்துவத்திற்கு பயின்று வேலை இன்றி இருந்த பல்வேறு மருத்துவ செவிலியர்களுக்கு தற்காலிகமாக வேலைகள் கொடுக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல்முறையில் செவிலிய மாணவர்களை தேர்ந்தெடுத்து சுகாதாரத்துறையில் ஒப்பந்த மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்த நிலையிலும் அந்த செவிலியர்கள் இப்போது பணியாற்றி வருகின்றனர். கொரோனா தாக்கம் முடிவடைந்த சூழலில் அவர்கள் தங்களை அரசு செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது “கொரோனா காலத்தில் பணிபுரிந்த 2,000 செவிலியர்களில் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுவிட்டது. தற்போது 800 செவிலியர்களுக்கு மட்டும் பணி வழங்க முடியாத நிலை இருக்கிறது. ஆகவே விரைவில் 800 செவிலியர்களுக்கும் அரசுப்பணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரிடர் காலத்தில் பணியாற்றிய ஒருவரைக் கூட விட்டுவிடாமல் பணி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதனைதொடர்ந்து அனைவருக்கும் பணி வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அத்துடன் நிச்சயம் பணி வழங்கப்படும் என்று செவிலியர்களிடம் அரசு தெரிவித்த பின்பும் இப்போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இதற்கிடையில் சிலகட்சிகளின் தூண்டுதலின் அடிப்படையிலேயே செவிலியர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். எனவே கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு வருங்காலங்களில் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களுக்கும் கண்டிப்பாக பணி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.