Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் மூடல்?…. மாணவர் சேர்க்கைக்கு தடை….. தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?…..!!!!!!

தமிழகத்தில் இப்போது அரசு பள்ளிகளை தவிர பல்வேறு தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் 25மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆரம்ப அனுமதியை பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் 390 நர்சரி பிரைமரி பள்ளிகள் தொடக்க அனுமதி பெறவில்லை. இந்நிலையில் இந்த பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை சார்பாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன் நாளை சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்கவுள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் திருவள்ளூர் மாவட்டத்தில் 343 பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 121 பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கவில்லை. அதேபோன்று சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 290 பள்ளிகளில் 85 பள்ளிகள் என்று 11 மாவட்டங்களில் இயங்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 25% மேல் அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 25 பள்ளிகள் தொடக்க அனுமதி பெறாமல் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தொடக்ககல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் நர்சரி, பிரைமரி பள்ளிகளில் 390 தனியார் பள்ளிகள் தொடக்க அனுமதி பெறாமல் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த பள்ளிகளும் வரும் கல்வியாண்டு தொடங்குவதற்குள் அனுமதிய பெறவேண்டும். இல்லையெனில் அந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தடைவிதிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில்தான் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் மேற்கண்ட பிரச்சனைகள் தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்க இருக்கின்றனர். அதன்பின் அந்த தனியார் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |