சமந்தா தற்போது மும்பையில் வீடு ஒன்று வாங்க உள்ளாராம்.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். இவர் சென்ற வருடம் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்குப் பின் இவர் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வருகின்றார்.
இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார் சமந்தா. இதை தொடர்ந்து இவர் மும்பையில் பெரிய வீடு ஒன்றை வாங்க உள்ளாராம். இந்த வீடு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் மதிப்பு 5 கோடியாம்.