Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. குறைந்து வரும் கோடை விடுமுறை…!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறையில்  தற்போது சில மாற்றங்களை ஏற்படுத்தி விடுமுறை காலம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல்  காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது.

அதில்,10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் மாதம் 5 முதல் மே மாதம் 2 வரை நடைபெறும் எனவும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ல் தொடங்கி மே 30 வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ல் தொடங்கி மே 31 வரையிலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ல் தொடங்கி மே 28 ஆம் தேதி வரையிலும் பொதுத் தேர்வுகள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், தற்போது 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 13 வரையிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் கோடை விடுமுறையில் பள்ளிகள் செயல்படுவது தேவையற்றது என பல்வேறு தரப்பினர் கூறியுள்ளனர். ஆனாலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு குறித்த தகவல்கள் மாற்றுக்கருத்துக்கள் இருக்காது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் மே 13ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்ததை அடுத்து பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்து ள்ளது.

Categories

Tech |