சென்னை சென்ட்ரல்- கூடூா் மாா்க்கத்தில், நாயுடுபேட்டை- பெடபரியா ரயில் நிலையங்களுக்கு இடையில் பொறியியல் பணி நடக்க இருப்பதால் ஏப்.5-ஆம் தேதி இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அந்த வகையில் விஜயவாடா- சென்னை சென்ட்ரலுக்கு இன்று காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரயில் கூடூா்-சென்னை சென்ட்ரல் இடையில் பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. சென்னை சென்ட்ரல்- விஜயவாடாவுக்கு இன்று பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-கூடூா் இடையில் பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் கூடூரிலிருந்து மாலை 4:20 மணிக்கு புறப்படும்.
வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி முழுமையாக ரத்தாகும் ரயில்கள்
நெல்லூா்-சூலூா்பேட்டைக்கு காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில், சூலூா்பேட்டை-நெல்லூருக்கு காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் ரத்து செய்யப்பட இருக்கிறது. சூலூா்பேட்டை-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு பிற்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் மூா்மாா்க்கெட் வளாகம்-சூலூா்பேட்டைக்கு அதிகாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில், ஆவடி-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு அதிகாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் போன்ற ரயில்கள் ரத்து செய்யப்படஉள்ளது.