ஹாங்காங் நகரில் வருகின்ற மே 8 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று அதன் தலைவர் கூறியுள்ளார்.
சீனாவின் ஆளுகையிலிருக்கும் ஹாங்காங் நகரின் தலைவராக கேரி லாம் உள்ளார். இந்த நகரிலுள்ள பொதுமக்களை நாடுகடத்த அனுமதிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனையடுத்து ஒருகட்டத்தில் அனைவரும் லாம் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஹாங்காங் நகரில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருந்துள்ளது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க ஹாங்காங் நகரில் வருகின்ற மே மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஹாங்காங் நகரின் தலைவர் லாம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த முடிவிற்கு தனது குடும்ப சூழலே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.