Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி தான் தொழில் முனைவோர் இருக்க வேண்டும்…. நடைபெற்ற கருத்தரங்கம்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

தொழில் முனைவோர் வியாபார திறமை குறித்து கருத்தரங்கம்   நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க  நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் வியாபார திறமை மற்றும் வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில்  கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் மாரிமுத்து, வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் பீர் இஸ்மாயில், செய்யது ஹமீதியா கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்யது ஹமீதியா  கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் தொழில் முனைவோர் திறமை மற்றும் வளர்ச்சி குறித்து சிறப்புரை ஆற்றியுள்ளார்.

Categories

Tech |