Categories
மாநில செய்திகள்

இன்று(ஏப்ரல் 5) இந்த பகுதியில் எல்லாம் கரண்ட் இருக்காது… உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் விநியோகம் பெரும் பகுதிகளான திருவில்லிபுத்தூர், பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டி தட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியார்பட்டி, காதி போர்டு காலனி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம்:
திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருவெறும்பூர், பந்தாளப்பேட்டை, நவல்பட்டு, டி.நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருஷ்ணசமுத் திரம், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண் ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி. சோழமாநகர், பிரகாஷ்நகர், திருவெறும்பூர் தொழிற் பேட்டை, நேருநகர், போலீஸ் காலனி, பாரத்நகர், 100 அடி ரோடு, குண்டூர், மலைக் கோவில், கிளியூர், பர்மா காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

இதைப்போல் கே.சாத்தனூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட கே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், எல்.ஐ.சி.காலனி, குடித்தெரு, காமராஜ்நகர், ஜே.கே.நகர், பழனிநகர், வயர்லஸ் ரோடு, ஆனந்த் நகர், எஸ்.எம். இ.எஸ்.இ.காலனி, சுந்தர் நகர், அய்யப்பாநகர், காஜாமலை காலனி, முல்லைநகர், இந்தியன் பேங்க் காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், செம்பட்டு ஒரு பகுதி, இச்சிகா மாலைபபட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, சந்தோஷ் நகர், ஓலையூர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜாநகர், பாரதி நகர் ஆகிய பகுதியில் இன்று  காலை 10 மணி முதல் மதி யம் 3 மணி வரை மின்சாரம் இருக்காது. அம்மாபேட்டை துணை மின்நிலையத்துக்குட்பட்ட ராம்ஜிநகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், சத் திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி,

நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டி புதூர், கரையான்பட்டி, வட சேரி, புதுக்குளம், இடையப் பட்டி ஆகிய பகுதிகளில்இன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. கல்கண்டார் கோட்டை துணை மின்நிலையத்துக் குட்பட்ட பரமசிவம் தெரு, காமராஜ் தெரு, மாருதி நகர், திருநகர், அர்ஜூனன் தெரு, உடையார் தெரு, மூகாம்பிகை நகர், ஆலத்தூர், கீழக்கல்கண் டார் கோட்டை, மேலகல்கண்டார் கோட்டை, அடைக்கலஅன்னை நகர், நத்தமாடிப் பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாலை,
சொக்கநாதபட்டி, மாந்தாங்குடி, காட்டு நாவல், மட்டயன்பட்டி, மங்களத்துபட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிபட்டி, வளவம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கரூர் மாவட்டம்:
காவல்காரன்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று  மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள தால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும். பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல் காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ராச்சாண்டார் திருமலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர், பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம்:
தேவகோட்டை துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மதுரை மாவட்டம்:
மதுரை நாட்டார்மங்கலம் துணை மின்நிலையத்தில் இன்று  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டம்குளம், இடையப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

ஆனையூர் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே காந்தி நகர், பாலமுருகன் நகர், ராமமூர்த்தி நகர், பழைய விளாங்குடி, கணபதிநகர், செம்பருத்திநகர், வி.எம்.டபிள்யூ. காலனி மற்றும் இதர பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

Categories

Tech |