ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 35-வது ஆண்டு விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் கழகத்தின் சார்பில் 35-வது ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்க தலைவர் அமல்ராஜ், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் பாலசுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுசாமி, வார்டு உறுப்பினர் இந்துமதி, புருஷோத்தமன், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சங்க அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் ஓய்வூதியர் மறைவிற்குப் பிறகு அவர்களது வாரிசுதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியான 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் கருணைத் தொகை 500லிருந்து ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.