தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தனித்தனியே விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த விடுதிகளின் உணவு பட்டியலில் தற்போது மாற்றம் செய்து புதிய உணவு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
காலை உணவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு:
திங்கள்கிழமை: சேமியா கிச்சடி ,தக்காளி சட்னி அல்லது சாம்பார் .
செவ்வாய்க்கிழமை : பூரி மசாலா
புதன்கிழமை: இட்லி, சாம்பார், சட்னி
வியாழக்கிழமை: இடியாப்பம், பட்டாணி குருமா அல்லது தேங்காய்ப்பால்
வெள்ளிக்கிழமை: பொங்கல் ,வரகு பொங்கல் /தினை பொங்கல்/ அரிசி பொங்கல், கத்தரிக்காய் கொத்சு, வடை
சனிக்கிழமை: ரவா கிச்சடி ,தேங்காய் சட்னி
ஞாயிற்றுக்கிழமை: தோசை /நவதானிய தோசை/ சாம்பார், சட்னி.
மதிய உணவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு:
திங்கட்கிழமை: சாதம், சாம்பார் ,இரு வகை பொரியல் , ரசம்,மோர், முட்டை / சாதம், சாம்பார் ,ஒரு பொரியல் ,ரசம், மோர், முட்டை மசாலா
செவ்வாய்க்கிழமை: காய்கறி பிரியாணி, காய்கறி குருமா, முட்டை
புதன்கிழமை: சாதம் ஆட்டிறைச்சி அல்லது கோழி குருமா அல்லது மட்டன் சிக்கன் குழம்பு , பொரியல், மோர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை: தக்காளி சாதம் அல்லது லெமன் சாதத்ம (அ) தயிர் சாதம், (அ) உருளை பொரியல், முட்டை.
வெள்ளிக்கிழமை: சாதம், காரக்குழம்பு, பொரியல், கூட்டு, ரசம், மோர், முட்டை.
சனிக்கிழமை: புதிண சாதம் (அ) காரட் சாதம், (அ) கறிவேப்பிலை சாதம், முட்டை, அப்பளம், பருப்பு துவையல்.
ஞாயிற்றுக்கிழமை: சாதம், முட்டை குருமா, ரசம், மோர்.
இரவு உணவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு:
திங்கட்கிழமை: சப்பாத்தி, குருமா
செவ்வாய்க்கிழமை: இடியாப்பம் குருமா (அ) காய்கறி கூட்டு
புதன்கிழமை: காய்கறி புலால், குருமா, ரைத்தா
வியாழக்கிழமை: ஊத்தாப்பம், சட்னி, சாம்பார்.
வெள்ளிக்கிழமை: கோதுமை தோசை, தக்காளி சட்னி
சனிக்கிழமை: சாதம், சாம்பார், பொரியல், ரசம்
ஞாயிற்றுக்கிழமை: தக்காளி சாதம் (அ) சாம்பார் சாதம், வறுவல்.
ஓவ்வொரு மாதத்தின் முதல் வாரம் மற்றும் 3வது வாரம் புதன்கிழமைகளில் 80 கிராம் வீதம் ஆட்டிறைச்சியும், 2வது மற்றும் 4வது வாரம் புதன்கிழமைகளில் 120 கிராம் வீதம் கோழி இறைச்சியும் வழங்கப்படும். தினமும் வழங்கப்படும் உணவு வகைகளுடன் வாரத்திற்கு 5 முட்டைகள் என ஒரு மாதத்திற்கு ஒரு மாணவருக்கு 20 முட்டைகள். முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு ஒரு வழைப்பழம். நாள்தோறும் மாலை நேரங்களில் வேகவைத்த பயறுகள், சுண்டல், காபி, தேநீர். பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.