Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஏப்ரல் 11-ம் தேதி”…. பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் 2 வருடங்களுக்குப் பிறகு திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த திருவிழாவை காண்பதற்காக பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் நேற்று காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டனர்.

அதாவது பக்தர்கள் பாதயாத்திரை, பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்வார்கள். இந்த திருவிழாவை முன்னிட்டு கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே இந்த திருவிழாவை முன்னிட்டு வருகிற 11-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |