பொறியியல் பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி என்று வெளியிட்டுள்ளது. அதன்படி தானியங்கி பொறியாளர், இளநிலை ஆய்வாளர், உதவி பொறியாளர், உதவி வேளாண்மை பொறியாளர், உதவி இயக்குனர், தொழிற் பாதுகாப்பு துறை, உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 307 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 03.05.2022. மேலும் இந்த பணிகளுக்கான சம்பள 37 ஆயிரத்து 700 முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 500 வரை. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூன் 26-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories