ரயில் கட்டணத்தை இந்திய ரயில்வே அதிகரிக்க உள்ளதாகவும், இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டீசல் என்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சார்ஜர் அல்லது டீசல் ரூபாய் 10 முதல் 50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏசி வகுப்பிற்கு ரூபாய் 50ம், ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூபாய் 25ம், பொது வகுப்பிற்கு ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories