பள்ளி மாணவியை கடத்தி சென்ற டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கார்ணாம்பூண்டி வசூர் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிவா மாணவியை கடத்திச்சென்று கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஷிமோகாவில் உள்ள மாணவி இருக்கும் வீட்டிற்கு சென்று சிவாவைப் பிடித்து கீழ்பென்னாத்தூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் இது குறித்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவாவை கைது செய்துள்ளனர்.