பள்ளி ஆசிரியர்களை அச்சத்தில் உறைய வைக்கும் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கையை புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு படிப்படியாக நிவர்த்தி செய்வதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்லாண்டு காலமாக ஆசிரியர்கள் வைத்து வரும் கோரிக்கையான சிபிஎஸ்சி ரத்து மற்றும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப் படுத்துதல் போன்ற கோரிக்கையை சட்டமன்ற கூட்டத்தொடரில் நிச்சயமாக 110 விதியில் அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் நாங்கள் அரசிற்கு வேண்டுகோள் வைக்கிறோம்.
மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காலங்களிலும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மாவட்ட கலந்தாய்வு தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று மாணவர்களின் வருகை பதிவு, சத்துணவு, மாத்திரைகள், மாணவர்கள் மருந்து உண்பது, காய்கறிகள் உள்ளிட்ட 21 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டி உள்ளது.
இதனால் ஆசிரியர்கள் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதேபோல் இணையதளம் நெட் பிரச்சனையால் புள்ளிவிபரத்தை காலையில் கொடுத்து ஒரு மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்பது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. மேலும் 101 அரசாணைகள் கோப்புகள் தேக்கமடைந்து ஆசிரியர்களின் மூலம் பயன் பெற முடியாமல் பாதிக்கப்படுகிறது. அதனால் 101 அரசாணை ரத்து செய்து தொடக்கக் கல்வித் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க மாவட்ட கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பு பட்டியல் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.