தேநீர் மற்றும் காபியின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 3,500 தேநீர் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் காபி மற்றும் தேநீர் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு தேநீர் 12 ரூபாயாகவும், காபி 15 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது எரிவாயு சிலிண்டரின் விலை 2,250 ரூபாயாகவும், ஒரு லிட்டர் பாலின் விலை 55 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக காபி மற்றும் தேநீரின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு பெட்டிக்கடையில் தேநீர் விற்றால்தான் அங்குள்ள பொருட்களும் விற்பனை ஆகும். ஆனால் காபி மற்றும் தேநீரில் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வரத்து குறையும் என கடைக்காரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் திருப்பூரில் ஏற்கனவே காபி மற்றும் தேநீரில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.