கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அமைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் கிருஷ்ணாராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரனான தினேஷ் என்பவருடன் சேர்ந்து அதை பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இருவரும் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதையடுத்து இன்று காலை வந்து பார்த்த போது கடையின் உள்ளே அமைந்துள்ள குடோனில் பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இந்த புகையின் காரணமாக கடை உரிமையாளர் தினேஷ் மற்றும் தீயணைப்பு வீரர் மாரீஸ்வரன் ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,