இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த போதிலும் இலங்கை மக்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தை நடத்தினர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாராவின் மனைவி யேஹாலியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் நாட்டின் இளைய தலைமுறையினருக்காக வீதியில் போராட்டத்தில் இறங்கியுள்ளேன். நாட்டு மக்கள், இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிர்காலம் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.