தொழிலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முனியசாமி கோவில் தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சக்தி விநாயகபுரம் பகுதியில் வசிக்கும் முத்துராமன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துராமன், அவரது தந்தை ரவிச்சந்திரன் மற்றும் முத்துராமனின் நண்பர் ராம்குமார் ஆகிய 3 பேரும் தூத்துக்குடியில் வேலை பார்க்கும் உதயகுமாரின் தையல் கடைக்கு சென்றுள்ளனர்.
அங்கு உதயகுமாரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து உதயகுமார் தூத்துக்குடி மத்தியபாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராம்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் மற்ற 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.