Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சமையல் செய்து கொண்டிருந்த மூதாட்டி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 24-ந் தேதி காஞ்சனா வீட்டிற்கு வெளியில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக காஞ்சனாவின் சேலையில் தீப்பிடித்தது.

இதனால் உடல்முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் காஞ்சனா அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காஞ்சனாவை உடனடியாக மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பிரம்மதேசம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |