Categories
உலக செய்திகள்

போர் விமானங்களை ஒப்படைத்து சரணடையும் ரஷ்ய வீரர்களுக்கு வெகுமதி….!!! உக்ரைன் அதிரடி அறிவிப்பு….!!

உக்ரைன் நாட்டின் டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை ஒப்படைக்கும் ரஷ்ய வீரர்களுக்கு 75 லட்சம் முதல் ஏழரை கோடி வரை வெகுமதி வழங்கப்படும் என உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் சபாநாயகர் கோர்நியன்கோ நாடாளுமன்றத்தில் உக்ரைன் அரசிடம் சரணடையும் ரஷ்ய வீரர்கள் தங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள நினைத்தால் அதற்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என கூறியுள்ளார். அதன்படி போர் கப்பல் அல்லது போர் விமானத்தை ஒப்படைக்கும் ரஷ்ய வீரருக்கு ஏழரை கோடி வெகுமதியும், ஹெலிகாப்டரை ஒப்படைத்தால் மூன்றரை கால் கோடி ரூபாயும், ராணுவ டாங்கி 75 லட்சம் ரூபாயும், ராணுவ கவச வாகனத்திற்கு 38 லட்சம் ரூபாயும் வெகுமதியாக வழங்கப்படுமென சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |