அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவின் நடுவே உக்ரைன் அதிபர் அனைவரும் தங்களால் இயன்ற உதவியை உக்ரைனுக்கு செய்யுங்கள் எனக் கூறும் வீடியோ ஒளிபரப்பாகி உள்ளது. சர்வதேச அளவில் இசை துறையில் சாதித்த சிறந்த இசைக் கலைஞர்களுக்கு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல்வேறு இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்பட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு அங்கிருந்தவர்களை இறுக்கமடையச் செய்தது. அதில் அவர், இசைக்கு நேர்மாறானது போரால் பாதிக்கப்பட்டு தங்கள் உறவினர்களை இழந்து கஷ்டத்தில் தவிக்கும் மக்களின் அமைதி. அவர்களின் கஷ்டங்களை உங்கள் இசையால் நிரப்புங்கள் என கூறியுள்ளார்.