தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக பீஸ்ட் படத்தின் மூலம் கூட்டணி சேர்ந்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பல முன்னணி கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் கேஜி எஃப் படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல், அவரது ட்விட்டர் பக்கத்தில் , வாவ்… டிரெய்லர் அமேஸிங் என நெல்சன் மற்றும் விஜய்யின் டிவிட்டர் ஹேண்டில்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியாகி உள்ளது. மேலும் அனல் பறக்கும் அரசியல் வசனங்களுடன் வெறித்தனமாக உள்ள பீஸ்ட் ட்ரெயிலரை, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து கேஜிஎஃப் சாப்டர் 2 படம் வருகிற 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது.
https://twitter.com/prashanth_neel/status/1510517488794038282?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1510517488794038282%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fprashanth-neel-lauds-beast-trailer%2Farticleshow%2F90637138.cms