துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேக்கிரி மங்கலம், குத்தாலம், பாலையூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பாலையூர், தேரழுந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், சேத்திரபாலபுரம், மாதிரிமங்கலம், அரையபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.